Sunday, June 30, 2013

உயர் ரத்த அழுத்தமும்..(High Blood Pressure)... உப்பும்....


உடனே விடையளியுங்கள் பார்க்கலாம்...!
உயர் ரத்த அழுத்த்த்திற்குக் (High Blood Pressure) காரணம் என்ன...?

”பூ.. ! இது தெரியாதா....? உப்பு....” என்பீர்கள்..!.
உண்மையில் உப்பு ஒரு அப்பாவி. !

உப்பிற்கும் உயர் ரத்த அழுத்தத்திற்கும் (High Blood Pressure) தொடர்பிருப்பதாய் எந்த ஒரு ஆய்விலும் நிரூபணம் இல்லை. அப்படி நிரூபிக்கும் ஒரு ஆய்வினை வடிவமைப்பதே சிரமம்  ! இதற்காகப் பல ஆண்டுகளாக ஒருவரைத் தொடர்ந்து அவரது பயன்பாட்டிலிருக்கும் உப்பின் அளவினையும் அவரின் உடல் நிலையையும் கண்காணித்து வருவதென்பது சற்றேறக்குறைய கடினமான ஒரு நிகழ்வே !
உப்பு உண்டால் ரத்த அழுத்தம் எகிறும் எனவும் அதனால் உணவினில் உப்பினைத் தவிர்க்கும்படியும் மருத்துவர் பரிந்துரைப்பது ஏன்...?

மருத்துவர்கள், நாளொன்றிற்கு அதிகபட்சமாக அனுமதிக்கும் சோடியத்தின் அளவு எவ்வுளவு தெரியுமா ? கால் தேக்கரண்டி உப்பு மட்டுமே !
உப்பு உடலில் இருக்கும்வரை ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உப்பு உடலை விட்டு நீங்கியபின் ரத்த அழுத்தமும் இறங்கிவிடும். உணவினில் முழுவதுமாக உப்பின்றி உட்கொண்டாலும்கூட ரத்த அழுத்தத்தில் ஓரிரு சுட்டெண்களே குறையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனால் ரத்த அழுத்தத்தில் மீப்பெரும் மாற்றம் நிகழ்வது இல்லை,

உப்பு நல்லதும் அல்ல; அதே சமயம் கெட்டதும் அல்ல. அதிமுக்கியமாக ரத்த அழுத்தத்திற்கு மூலகாரணம் உப்பு அல்ல...!
ரத்த அழுத்தம் வரக் காரணம்...?

இன்சுலின்...
ரண்டுத் துண்டு ரொட்டி (2 Slice Bread), செயற்கை பழக்கூழ்மம் (Jam), ஒரு குவளை ஆரஞ்சுப் பழச்சாறு அருந்துகின்றீர்கள் எனில். இதில் துளி உப்பு இல்லை. ஆனால் ஏராளமாசர்க்கரை உள்ளது. இத்தனை சர்க்கரையையும் செரிமானமாக்க உடலில் இன்சுலின் தேவையின் அளவை அதிகரிக்கின்றன..

இன்சுலின், ரத்த அழுத்தத்தினை மூன்று விதங்களில் உருவாக்குகின்றது.
முதலாவதாக, சிறுநீரகத்திற்கு (Kidney) அதிக அளவில் சோடியத்தினைத் தேக்க, இன்சுலின் உத்தரவிடுகின்றது . இதனால் தேவையற்ற சோடியத்தை சிறுநீரகம் வெளியேற் நினைத்தாலும் அதனால் முடிவது இல்லை. சிறுநீரகத்தில் சோடியம் தேங்கினால் அதற்கு ஏற்ப நீரும் தேங்கியே ஆகவேண்டும். ஆக உடலில் சோடியமும், நீரும் தேங்க ஆரம்பிக்கும்பொழுது  நம் ரத்த அழுத்தம்  அதிவேகமாக அதிகரிக்கின்றது.

இரண்டாவதாக, இன்சுலின் நம் இதயத் தமனிகள் மற்றும் சிரைகள் வி்ரிவடைவதைத் தடுக்கின். காரணம் இன்சுலின் என்பது ஒரு வளர்ச்சியளிக்கும் ஹார்மோன் ஆகும். இதயத் தமனிகள் மற்றும் சிரைகள் விரிவடையும் செயற்திறனை இழக்கும்பொழுது, இதயம் அதி வேகத்துடன் ரத்தத்தினை இறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுவதால் ரத்த அழுத்தம் உயர்கின்றது..
மூன்றாவதாக, இன்சுலின் என்ற ஹார்மோனானது நரம்பு மண்டலத்தில் கிர்ச்சியை ஏற்படுத்தி norepinephrine எனும் வேதியைச் சுரக்க வைக்கின்றது. இது அட்ரினலின் போன்று தகைவு (Stress) அளிக்கும் ஒரு திரவம். நீங்கள் அதிகம் கோபப்பட்டால், ஆவேசப்பட்டால் அட்ரினலின் சுரக்கும். கோபப்டும்பொழுது இதயம் அதிக ரத்த்தினை இறைக்கத் தயார் ஆகும். இவ்விதமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது..

ஒன்று புரிகின்றது...! ரத்த அழுத்தத்தினைக் குறைக்கவேண்டுமெனில் நாம் நிறுத்த வேண்டியது உப்பினை அல்ல !
மாறாக-

சர்க்கரையையும்  தானியத்தையும் மாவுச்சத்து நிரம்பிய (Starch) உணவுப் பொருட்களையுமே.....!
ஐயம் இருப்பின் உணவில் உயர் கொழுப்பை அதிகரித்து தானியத்தையும், சர்க்கரையையும் மாவுச் சத்துப் பொருட்களையும் அறவே ஒழித்து ஒரு வாரம் சோத்தித்தறியுங்கள் !.

உயர் ரத்த அழுத்தம் சட சடவெனக் குறைவதுத் திண்ணம் !  உப்பினை  எவ்வளவு உண்டாலும் அது சிறுநீரகத்தில் தேங்காமல் வெளியே வந்துவிடும்.

நன்றி:
மூலம்:  புரபசர் செல்வன்.

1 comment:

Sridharan Jagadeesan said...

Thank you We are discussing at home with your information