Sunday, June 23, 2013

Acid Reflux Disease


சமீபத்தில் இங்கே என் நண்பன் ஒருவனுக்கு சமீப காலமாக ஒரு பிரச்சினை. மருத்துவம் நாடியபொழுதுதான் இந்நோயின் தீவிரம் புரிந்தது. இதுபோல் இங்கே பல அமெரிக்கர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அல்லலுறுகின்றனர். அதிகப் பண விரயம். நிவாரணம் கொஞ்சம். அதனை ஒட்டி அதனை நோக்கி ஆராய்ந்ததில்... அது தொடர்பாகப் படித்ததில்... புரிந்ததில்... இங்கே உங்களுடன் பகிர்கின்றேன்.
GERD என்றழைக்கப்படும் Gastroesophageal reflux disease (GERD) என்னும் நோயானது  ஒவ்வொரு அமெரிக்க வாழ் மக்களின் வாழ்வினில் தங்களின் வாழ்நாளில் கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் சந்திக்கும் வாய்ப்பு அதிகம் என ஒரு கணக்கெடுப்பு அறிவிக்கின்றது.

GERD என்பது இரைப்பையில் ஜீரணிப்பதற்காக சுரக்கும் அமிலமானது ஜீரணித்தலில் சரிவர பயன்படுத்தப்படாமல் வாயிற்கும் இரைப்பைக்கும் இடைப்பட்ட பகுதியில் பயணிப்பதால் வரும் ஒரு இடர்பாடாகும். இதனை அமெரிக்க மருத்துவர்கள் Acid Reflux Disease என்றழைக்கின்றனர்.
இதன் அறிகுறிகள்:

·         இதயத்தில் தொடர்ந்து எரியும் உணர்ச்சி (Heartburn)
·         புளிப்பு அல்லது துவர்ப்பு அல்லது உப்புச் சுவை எப்பொழுதும் நாவில் தொடர்ந்து உணர்ந்து கொண்டே இருப்பது. சிலருக்கு உலோகச் சுவை இருக்கக்கூடும்.
·         தொண்டையில் எரிச்சல்
·         அடிக்கடி நெஞ்சு வலிப்பது அல்லது எரிவது போன்ற உணர்வு
·         ஏப்பம்
போன்றவை பொதுவான அறிகுறிகள்.

எப்படி நிகழ்கின்றது ...?
·         நாம் உண்ணும்பொழுது, மில்லியன் கணக்கான மீநுண்ணிய அமில ஊற்றுக்கள் உணவினை ஜீரணிக்க அமிலத்தினைச் சுரக்கின்றன.

·         வாயின் மூலம் உணவினை உமிழ்நீருடன் கலந்து சுவைக்கப்பட்டு  உணவினை கூழ்ம நிலையில் இரைப்பைக்கு LES (Lower Esophageal Sphincter) என்ற வால்வானது அனுப்புகின்றது.

·         இந்த LES வால்வானது சரியாக மூடப்படவில்லையெனில் அல்லது அடிக்கடி திறந்திருந்தாலோ இரைப்பையிலிருக்கும் அமிலமானது மேல் நோக்கிப் பயணிக்கும்.

·         இரைப்பை அமிலமானது தொடர்ந்து இவ்விதமாக வெளிப்பட்டுக் கொண்டே இருந்தால் அந்தப் பகுதியானது தொடர்ந்து பாதிக்கப்படும் நிலைக்கு Erosive Esophagitis என்று மருத்துவ அறிவியல் பெயரிட்டு அழைக்கின்றது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

·         சாக்கலேட்
·         பொரித்த உணவுகள்
·         கொழுப்பு உணவுகள்
·         பெப்பர்மிண்ட்
·         தக்காளி சார்ந்த உணவுகள்
·         காஃபின் கலந்த பானங்கள்
·         மசாலா உணவுகள்
·         வெங்காயம்
·         சிட்ரஸ் பழங்கள்
·         ஆல்கஹால்

செய்ய வேண்டியவை:

·         கொஞ்சமாய் அளவாக இடைவெளிவிட்டுச் சாப்பிடுங்கள்.
·         தூங்குவதற்கு 2 - 3 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டுவிடுங்கள்.
·         புகைப் பிடிக்கும் பழக்கம் இருப்பின் குல தெய்வம் முன்பு சத்தியமிட்டு பழக்கத்தினை நிறுத்திவிடவும்.
·         தலையணை வைத்து உறங்கவும்.

மருத்துவர்கள் DEXILANT போன்ற மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர்.

 

No comments: