Wednesday, October 18, 2006

சந்தித்தேன்...சிந்தித்தேன்...

நண்பர்களே... நலமா...?

நேற்று (20,Aug2006) நம் நண்ப்ர்கள் ராமா, நடேஷன் அண்ணா, காழியூரார் அவர்களையும் அதன் பின்னர் விசாலம் அம்மா அவர்களையும் சந்திக்கும் பேறு பெற்றேன்...

என்னிடம் இருந்த ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் Surf Excel போட்டு வெளுப்பாக்கிவிட்டனர்.

எங்கள் சந்திப்பு சென்னைஅசோக் நகர் ஆஞ்சநேயர் கோயிலில் ஆரம்பித்தது. நான் ஒரு ஓரமாய் கண் மூடி அமர்திருக்கும்பொழுது திரு. ராமா என்னுடன் ஜமாவானார்.

ராமாவைப் பற்றி நான் சொல்லியா தெரியவேண்டும்...?

சுந்தர காணடத்தில் அனுமான் ஒரு சமயம் மனம் தளர்ந்து உட்கார்ந்தபொழுது,

"அநிர்வேத ஸ்ரியோ மூலம் அநிர்வேத: பரம் ஸுகம்:அநிர்வேதோ ஹி ஸததம் ஸர்வார்த்தேஷு ப்ரவர்தக::"

என்றொரு ஸ்லோகம் வரும். அதாவது உற்சாகமே ஜயம் என்ற பொருள் பட அனுமனை Motivation பண்ணிய ஸ்லோகம்...

உற்சாகம் வேண்டுமானால் நம் ராமாவை அழைக்கலாம்...

திரு. நடேசன் அண்ணா அவர்களுடன் chat பண்ணியபொழுது, அவர் ஒரு சிறிய பையன் என்றே எண்னணியிருந்தேன்.

கடலூருக்கு அருகே புவனகிரியிலிருந்து எனக்கொரு சிஷ்யன். அவன் மிகவும் சின்னப் பையன். சென்ற வருடம் படிப்பை முடித்திவிட்டு என்னுடன் சிறிது காலம் இருந்துவிட்டு பின்னர் Patni comuters, Pune ல் join பண்ணிவிட்டான்.

நடேசன் அவர்களையும் அப்படியே எண்ணிக்கொண்டு chat தொடர்ந்தேன். ஆனால் நேற்று சந்தித்த பொழுது முழு பிம்பமும் மாறிவிட்டது.

அவரது சமூக சேவை மிகவும் புனிதமானது. விவேகானந்தர் சொன்னது இங்கே நினைவிற்கு வருகிறது.

" வேதங்களை ஓதுவதைவிட, உபநிஷத்தில் பாண்டித்தியம் பெற்று பிதற்றிக்கொண்டிருப்பதைவிட... பசித்தவனுக்கு ஒரு ரொட்டித்துண்டு கொடுப்பவனே இறைவனுக்கு செய்யும் உண்மையான தொண்டு..."நடேசன் அண்ணா அவர்கள் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்...

காழியூரார் பற்றி...

குழந்தையின் இதயமும், ஞானியின் ஞானமும், இளைஞனின் உற்சாகமும் என பாரதி வேண்டிய அத்தனை குணங்களும் நிறைந்தவர். அவரைப் பற்றி ஆராய்ந்தபொழுது மிகப் பெரிய சில உண்மையான உண்மைகள் தெரிய வர ஆரம்பித்தன... பின்னால் தொடர்கிறேன்...

விசால‌ம் அம்மா அவர்களது வீட்டிற்கு சென்றேன்.

நாம் கோவிலுக்கு சென்றிருக்கிறோம். ஆனால் வீடே கோவிலானால்...? அவர் வீட்டினில் அடியெடுத்து வைத்ததுமே ஒரு தெய்வீக உணர்வை உணர்ந்தேன்.
அவரது வாழ்க்கைத்துணை உடல் நலம் குன்றியிருந்தார். ஒரு அக்குபஞ்சர் மருத்துவர் ஊசியால் குத்திக்கொண்டிருந்தார்.

ஒரு முறை வேதாத்திரி மகரிஷியுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது,

"முள் வைத்து முனிவரைக் குத்தினாலும் அம்முனிவர் அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்..." என்றார்.

இங்கேயும் அதுதான் நடந்தது.

ஊசியால் குத்தியபொழுதும், வலியைப் பொறுத்துக்கொண்டு முகத்தில் புன்முறுவலை வரவழைத்துகொண்டு அகம் மகிழ வரவேற்றார்...

என்ன தவம் செய்தோனோ...
இப்படிப்பட்ட நல்ல மனிதர்களின் நட்பு கிடைப்பதற்கு...?

தொடரும்.....

Friday, October 13, 2006

சிறுகதை..."உயர்வுள்ளல்" - இரவீந்தரன் கிருஷ்ணசாமி

சிறுகதை... உயர்வுள்ளல் - இரவீந்தரன் கிருஷ்ணசாமி

(நம்பிக்கையின் பொற்காசு பரிசுக் கதை - 2 http://nambikkaioli.blogspot.com/2006/06/2.html)

அண்ணா பன்னாட்டு விமான நிலையம். சீரான ஓடுதளம். அதிகாலை சூரிய ஒளிபட்டு பனித்துளிகள் வானவில்லை பிறப்பித்துக் கொண்டிருந்தன. பரபரப்பான முகங்கள். அனைவரும் அவரவர் அலுவல்களில் பிஸியாகியிருந்தனர்.

பிரவீன் விமானநிலைய சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு ஹாயாக சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான். இன்னும் ஒரு மணி நேரம்அவகாசமிருந்தது.

டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒரு விழாவில் தன்னை சிறந்த மென்பொருள் (டிகூஎம்) எனத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பதற்காக அழைத்திருந்தனர். கண்களை மூடிக்கொண்டான்.

மனதில்தான் எல்லாம் அடங்கியிருக்கிறது, ஒருவனின் வெற்றியும் தோல்வியும் உட்பட. தன்னுடைய நிறுவனம் உலகிலேயே மென்பொருள் தரத்தில் முதலிடம் வகிப்பதாக ஜப்பான் நாட்டினர் தேர்ந்தெடுக்க மூலகாரணமே 'ஜேகே'தான்.

அன்று மட்டும் அந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணிசெய்தபொழுது அவர் மட்டும் தன்னை பணிநீக்கம் செய்யாமலிருந்தால்...? இந்த ஐந்தாண்டுகளில் மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரு ப்ராஜக்ட் மானேஜராக உயர்ந்திருப்பேன். அவ்வளவே!

அந்த நிகழ்வு திரைப்படமாய் மனத்திரையில் ஓடியது.

அந்த பன்னாட்டு நிறுவனத்தின் வங்கிக் குழுவின் முதுநிலை மேலாளார்ஜேகே ஆட்குறைப்புப் பட்டியலுள்ள பெயர்களை வாசிக்க ஆரம்பித்தார். அனைவரின் முகத்திலும் பதற்றம், ப்ரவீனைத் தவிர.

தன்னுடைய பெயர் அப்பட்டியலில் இருக்கக்கூடாதென எல்லாக் கடவுள்களையும் பணியாளர்கள் வேண்டிகொண்டனர்.இறுதியில் "ப்ரவீன்" என்ற பெயரும் வாசிக்கப்பட்டது.

இது மிகப் பெரிய அதிர்ச்சி! யாராலும் இதை நம்ப முடியவில்லை. ஏனெனில் பிரவீன் ஒரு கடின உழைப்பாளி. இதற்கு முன்னால் நிறுவனத்திற்காக நிறைய சாதித்திருக்கிறான். தன்னுடைய திறமைகளை நன்கு வெளிப்படுத்தியவன்.

ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் தென்னிந்திய கிளைகளை கணணிமயமாக்கப்பட்டபொழுது தன்னுடைய குழுவை கட்டுக்கோப்பாக வழிநடத்தி மிகக் குறுகிய காலத்தில் பணியை முடித்தவன்.

தலைமை அலுவலகத்தின் எவ்வித உதவியும் இல்லாமல் எல்லா பிரச்சினைகளையும் தனி ஒருவனாகவே நின்று சமாளித்து நிறுவனத்திற்கும், முதுநிலை மேளாலர் 'ஜேகே' விற்கும் எவ்வித தலைவலியும் தராமல் வெற்றிகரமாக ப்ராஜக்ட்டை முடித்தவன்.

அவ்வங்கியின் வட்டார மேளாலரே மனதார வாழ்த்தியவர். ஒரு வாடிக்கையாளரிடமிருந்து வாழ்த்துப் பெறுவது என்பது மிகப் பெரிய விஷயம், இத்துறையில்.

இப்படி பெயரும் புகழும் சம்பாதித்தவனிற்கா பணிநீக்கம்...? மம்சாபுரம் வங்கிக்கிளையிலேயே நல்ல பெயர் வங்கியவனிற்க பணி நீக்கம்...?நியாய தர்மங்கள் தோற்றுவிட்டனவா...?

இதில் ஏதோ சூது நடந்திருக்கவேண்டும்.பிரவீனால் இதை ஜீரணிக்க முடியவில்லை.மனிதவள மேளாலர் கமலேஷ் குமர்ரை சந்தித்தான்.

"இப்பொழுது நம் கம்பனி மிகப்பெரிய நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே, நம் பணியாளர்களை லே ஆஃப் செய்கிறோம். ப்ளீஷ் சைன் ஹியர்..."

"என் பெயர் எப்படியோ இந்த படிவத்தில் தவறுதலாக வந்திருக்க்வேண்டும்..."

"இல்லை. உன் டிபார்ட்மெண்ட்லிருந்துதான் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்...."

"யார்...?"

"உன் சீனியர் மானேஜர் சுந்தரராமன்...."

சப்த நாடிகளும் ப்ரவீனுக்கு அடங்கிவிட்டது. முதுகில் குத்திவிட்டனரே...!

"டீ ப்ரேக்கில் கூட ஜேகேயும் சுந்தரராமனும் சிரித்து சிரித்துப் பேசினார்களே...."

இனியென்ன இருக்கிறது இவ்வுலகில்...? எல்லோருமே நம்பிக்கைதுரோகிகள்...ப்ரவீன் தன்னுடைய கிரமத்திற்குச் சென்றான்.

பழங்கால பரந்த வீடு. கோபால்சாமி தாத்தா வயல்காட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். நீண்ட வெண்ணிற தாடி. தும்பைப் பூ சலவை வேட்டி சட்டை. கதர்த்துண்டு.

முகத்தில் ஒரு ஞானியின் பிரம்ம தேஜஸ். புருவ மத்தியில் சின்னதாய் வட்ட வடிவில் குங்குமம். இந்த 102 வயதிலும் திடகாத்திரமான நோய் நொடியில்லாத உடல். தீட்சண்யமான கண்கள். பழம்பெரும் சுதிந்திரப்போராட்ட வீரர்.

காந்தித்தாத்தாவும், வினோபாவும் இவருடைய ஆத்மார்த்தமான நண்பர்கள். அவர்கள் இந்த வீட்டிற்கு வருகை செய்த பெருமையுண்டு. ஊரே இக்குடும்பத்தின் மீது ஒரு மதிப்பு கல்ந்த மரியாதை வைத்திருந்தது.

பிரவீன் மனம் உடைந்து போனான். சோர்வாகக் காணப்பட்டான்.வீட்டில் அனைவரிடமும் தனக்கு நேர்ந்த அநீதியைச் சொல்லிகவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.

கோபால்சாமித் தாத்தா, பேரன் பிரவீனைதன்னிடம் அழைத்தார்.

'என்ன பிரச்சினை...?"

விளக்கினான்.

தாத்தா அவனை தீர்க்கமாய் உற்று நோக்கினார்.

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எல்லாம் நன்மைக்கே...."

தன்னுடன் அழைத்துச் சென்றார்.

"என்ன தாத்தா நான் சீரியசாக பேசுகிறேன். நீங்கள் தத்துவம்பேசுகிறீகளே... உங்களுக்கி இது மாதிரி ஒரு சம்பவம் நடந்திருந்தால்தெரியும்...."

தாத்தாவின் மீது கோபம் படர்ந்த்தது.

"யோசி...உன்னை பணி நீக்கம் பண்ணியதும் நன்மைக்கே. ஒருவனதுஎண்ணங்களுக்கும் அவனது சூழ்நிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த வாழ்க்கைச் சம்பங்கள் அக்காலகட்டத்திற்கு அவனது வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன..."

இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தி, 'ஆண்டவனின் ஒவ்வொரு செயலிலும் ஒரு செய்தி இருக்கும். அதில் ஆயிரம் உட்பொருட்களடங்கியிருக்கும்.யோசி...யோசி....'

என்ன யோசிக்க...? முதுகில் குத்தியதையா...? துதிபாடிகள் அங்கேகோலோச்சுவதையா...? மேல்மட்டப் பதவியிலிருப்பவர்கள் உண்டுகொழுப்பதையா...?எல்லாவற்றிற்கும் மேலாக சேர்மன் எப்பொழுது சுகமான நித்திரையிலிருந்து கண்விழிப்பார் என்பதையா...?

இவனது மன ஓட்டங்களைப் புரிந்துகொண்ட தாத்தா தொடர்ந்தார்.

'ஓடு உடைபட்டால்தான் குஞ்சு வெளிவரமுடியும். தொப்புள் கொடிஅறுந்தால்தான் குழந்தை தன்னிச்சையாக் சுவாசிக்க முடியும்...

''...........''

இதெல்லாம் ஏன் நடக்கவேண்டும்...?'

பிரவீன் யோசித்தான்.

அடுத்து என்ன...? அடுத்த கட்ட வளர்ச்சி...? என்ன செய்வது...? என்னதீமானிப்பது...? எப்பொழுது ஆரம்பிப்பது...? எப்படி செயல்படுத்துவது...?

'யோசி...யோசி....உனக்குள்ளே விடை உள்ளது...

''எனக்குள்ளேயா...?'

தாத்தா தரையில் அமர்ந்தார். தன் கைவிரலால் மணலில் ஒரு கோடு கிழித்தார்.

'இந்தக் கோட்டைத்தானே நீ மிகப்பெரிய பிரச்சினையாக கருதுகிறாய்...?இதைத்தானே உன் வாழ்வி மிகப்பெரிய தடையாக எண்ணி கலங்குகிறாய்...?'

அதற்கு இணையாக அதைவிட ஒரு மிகப்பெரிய கோட்டைக்கிழித்துவிட்டு தீர்க்கமாய் பிரவீனைப் பார்த்தார்.

'உன் பிரச்சினைகளைவிட உன் பலமும் திறமையும் பெரிது என்று நீநம்பினால்....நீ எதிர்பார்த்ததைவிட பல மடங்காய் உயரலாம்....'

அவனுள் பொறி தட்டியது.அப்படியானால் நான் ஏன் ஒரு ஜீ.எம். ஆக உயரக்கூடாது...?

தாத்தா அவனின் உள் மன உணர்வுகளை உணர்ந்தார்.

'யானை தன் பலத்தை உணர்ந்தால் பிச்சை எடுக்குமா...?''

இதெல்லாம் சாத்தியமா தாத்தா...? என்னால் முடியுமா..?

''ஏன்...?'

'ஜீ.எம். ஆக எனக்கு முன் அனுபவம் இல்லையே தாத்தா...? எனக்குநம்பிக்கை இல்லை....'

'பி.டி.உஷா தெரியுமா...?'

'ம்..'

'அவருக்கும் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபொழுது ஓடிய அனுபவம் இல்லை.எப்படி சாத்தியமாச்சி...? 'ஒருவன் தான் எண்ணியதை மறவாத நினைப்புடன்தொடர்ந்து முயல்வானானால், அவன் எண்ணியவண்ணமே அதை அடைதல் எளிது'னு வள்ளுவர் சொல்றார்...'

உற்சாகமாய் சென்னை திரும்பினான். விண்ணப்பித்தான். ஜீ.எம்.முக்குரிய முன் அனுபவம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டான்.

சுவற்றில் அடிபட்ட பந்தாய் தாத்தாவிடம் திரும்பினான்.

'இதுவும் நன்மைக்கே....'

சிரித்தார்.

'யோசி...யோசி...யோசனையில்தான் செயல்களின் விதைகள்அடங்கியுள்ளது....வாழ்க்கையில் ஒரு கதவு மூடும்பொழுது இன்னொரு கதவு திறக்கப்படுகிறது. நாம் நமக்காகத் திறக்கப்பட்டக் கதவை கவனியாது மூடிய கதவையே உற்று நோக்குகிறோம்....'

'அந்த திறக்கப்பட்ட கதவு எது...?'

'நீ ஏன் ஒரு ஜீ.எம்.முக்கு வேலை கொடுக்கக்கூடாது...?'

'நான் எ.. ப்..படி...?'

மெல்ல புரிய வந்தது.

'அதற்கு வாய்ப்பு...?'

'அதோ அந்த கொக்கு மீன்களை எப்படிக் கண்டுபிடிக்கிறது...? பாம்பு எப்படித்தவளையைக் கண்டுபிடிக்கிறது....? தேவைகளின் அடிப்படையில்தானே...?'

'ஓ...!'

பிரகாசமானான் பிரவீன். தெளிவானான். உற்சாகமாய் சென்னைகிளம்பினான்.

ஏற்கெனவே இவன் அந்த அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் கிளைகளை கணணிமயமாக்கப்பட்டபொழுது அதன் வட்டார மேலாளர் தனக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய ஆசைப்படுவதாகக் கூறியிருந்தார். சந்தித்து உரையாடினான். கடன் கிடைத்தது.

'ஷ்ரப்டிக்' என்று ஒரு மென்பொருள் நிறுவனம் துவங்கி டோக்கியோவில் விருது வாங்குமளவிற்கு வளர்ந்தாகிவிட்டது. எல்லாம் மனதில்தான் உள்ளது.டோக்கியோவில் விருது வாங்கியதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர்.

சென்னை திரும்பியாயிற்று. ஆனாலும் ஏதோ ஒன்று மனதைப் பிசைந்து கொண்டிருந்தது. மனதில் ஒரு நிம்மதியின்மை. மீண்டும் தாத்தாவைச் சந்தித்தான்.

'பேராசை, சினம், கடும்பற்று, வஞ்சம், முறையற்ற பல் கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை.. இந்த ஆறில் ஏதோ ஒன்றோ அல்லது பலவோ காரணமாயிருக்கும். இந்த அறு தீய குணங்களையும் வெளியேற்று... எது என்று, எப்படி என்று யோசி....

'என்ன அது...? ஏன்...? எப்படி...? விருது வாங்கியும் மனதில் நிம்மதியும்சந்தோசமும் இல்லையே ஏன்...?

'எப்படி இந்த உயர்ந்த நிலையை அடைந்தாய்...?'

'படிப்படியாய் உழைத்து முன்னேறி...'

'அப்படியானால் இதற்கு முன்னால் நீ உழைக்கவில்லையா...? மூலம் எது...?'

பணி நீக்கம்...யாரால்...? ஏன்...? எதனால்...?ஜேகே....

ஆக ஒன்று புரிகிறது. ஜேகே இன்னமும் அடி மனதில் ஒரு மூலையில் இருக்கின்றார். இருக்கட்டும். நல்லதுதானே...? அதனால்தானே முன்னேறினேன்....?'

'அப்படியானால் உன்னை வேறு யாரோ ஆட்டுவிக்கின்றனர்....உன் கண்ட்ரோல் உன்னிடம் இல்லை...?'

'.......!?

'எது...? எது...? வஞ்சம்தான் என் முன்னேற்ர்த்திற்குக் காரணமா...? என்னசெய்யலாம்...? என்ன பரிகாரம்...? வஞ்சம் ஏன் வருகிறது...? பழியுணர்ச்சிமனதில் தேக்கப்படும்பொழுது...! அந்த எண்ணத்தை எப்படி மனதிலிருந்துஎடுப்பது...?

'மன்னித்து விடு...மனதார மன்னித்துவிடு...எதிரியையும் நேசி...

'ஜேகே அந்தப் பன்னாட்டு நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு பல மாதங்களாகிவிட்டது.

பிரவீன் பழங்களுடன் ஜேகே வீட்டிற்குச் சென்றான்.ஜேகேவிற்குப் பேரதிர்ச்சி..! இருவரும் மனம் விட்டுப்பேசினர். தன்நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற முடியும...? என்று கேட்டான்.

ஜேகேயின் கண்களில் குளம் குளமாய் நீர் வழிந்தோடியது. இப்பொழுதுஇருவருக்குமே மனம் இலேசாகியிருந்தது.