Wednesday, March 20, 2013

உணவு உண்ணும் முறை



உணவு உண்ணும் முறை:

 உணவு உண்பது ஒரு கலை. அது ஒரு தவம்.

    உணவு அறுசுவை உணவாய் இருக்கட்டும். 


  1. அறுசுவையையும் திகட்டும்படி சாப்பிடு.
  2. முதலில் இனிப்பு அதன் பின்னர் மற்ற சுவைகளை சுவைக்கும்படி சாப்பிடு.
  3. நாக்கில் சுவைத்து ரசித்து கூழ்மமாக்கி சாப்பிடு. நாக்கில் உணவின் சுவை மறைந்த  பின்னர் சாப்பாட்டுக் கூழ்மத்தினை வயிற்றிற்கு அனுப்பு.
  4. உணவினை உமிழ்நீர் கலந்து சுவைத்து சாப்பிடு. உதடு பிரிந்தால் உமிழ்நீர் கலக்காது. உதடுகள் பிரிக்காமல் உணவினை உமிழ்நீருடன் அரைத்து கூழ்மமாக்கிச் சாப்பிடு.
  5. சாப்பிடும்பொழுது கவனம் வேறெங்கும் சிதறவேண்டாம். உணவினில் கவனம் எளிதில் செரிக்க உதவும். உமிழ்நீர் சுரக்கும்பொழுது சற்றேறக்குறைய 500 வகையான சுரப்பிகள் சுரக்கின்றன. உணவு உண்பதனில் கவனம் சிதறும்பொழுது உமிழ்நீர் சுரப்பதில்லை.  
  6. டெக்னிக்: உதடுகளை மூடி கண்களை மூடிக்கொண்டு மெல்லும்பொழ்து உணவின் மீது முழு கவனம் கிடைக்கும். இது ஒரு தியானம்.
  7. உணவினை உமிழ்நீருடன் கலந்து பற்களால் கூழ்மம் ஆக்கவும்
  8. சாப்பிடும் முன்பாக அரைமணிநேரம் நீர் அருந்தாதே.  சாப்பிட்டபின்னர் அரை மணிநேரம் நீர் அருந்தாதே. சாப்பிடும்பொழுதும் நீர் அருந்தாதே. தவிர்க்க இயலா காரணங்களினால் நீர் அருந்த நேரிட்டால் அது நாக்கினையும் தொண்டையையும் நனைப்பதாக மட்டும் இருக்கட்டும்.


சாப்பிடும்பொழுது தவிர்க்கவேண்டியவை:


  1. தொலைக்காட்சி, வானொலி கவனித்துக்கொண்டு சாப்பிடாதே.
  2. புத்தகம் படிக்காதே.
  3. எவருடனும் உரையாடாதே.
  4. கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உணவருந்தாதே ! சம்மணங்கால் இட்டு அமரும் நிலையிலேயே உணவருந்து.
  5. அம்மாக்கள் குழந்தைகளுடன் உட்கார்ந்து உணவருந்தவேண்டாமே !
  6. முகம் கை கால் அலம்பிய பின் உணவருந்திடு.
  7. குளித்துமுடித்தபின்னர் முக்கால் மணி நேரத்திற்கு உணவருந்தாதே.  உணவருந்தியபின் இரண்டரை மணி நேரம் வரை குளிக்காதே.
  8. இயற்கை உணவு எதை வேண்டுமானாலும் சாப்பிடு.
  9. பசிக்கும்பொழுது மட்டும் உணவு கொள். அதை மனதிற்குப் பிடித்த மாதிரி ரசனையுடன் சாப்பிடு
  10.  ஏப்பம் வரும்வரை திகட்டும்வரை உணவருந்து. ஏப்பம் வந்தபின் உணவருந்துவதை நிறுத்திவிடு. (ஏப்பம் – இரைப்பையில் வேலை முடிந்து உணவு சிறுகுடலுக்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதற்கான உடலின் சமிக்ஞை. உணவருந்தும்பொழுது ஏப்பம் வந்தால் நீங்கள் சரியான முறையில் உணவருந்தியதாய் பொருள்.)

.




6 comments:

Ananya Mahadevan said...

Just beautiful!

வடிவேல் கன்னியப்பன் said...

அருமை!நன்றி.

Anonymous said...

Very Nice. Thanks lot for nice information.
-Vanji

Anonymous said...

Miga Arumai sir mikka Nandri

Anonymous said...

Miga Arumai sir mikka Nandri
arjun

Senthiil said...

பல நல்ல விசயங்கள், ரொம்ப லேட்டாதான் தெரிகிறது, உங்க தளம் இத்தனை நாள் தெரியாம போய்விட்டதே...