உணவு உண்ணும்
முறை:
உணவு உண்பது ஒரு
கலை. அது ஒரு தவம்.
உணவு அறுசுவை உணவாய்
இருக்கட்டும்.
- அறுசுவையையும் திகட்டும்படி சாப்பிடு.
- முதலில் இனிப்பு அதன் பின்னர் மற்ற சுவைகளை சுவைக்கும்படி சாப்பிடு.
- நாக்கில் சுவைத்து ரசித்து கூழ்மமாக்கி சாப்பிடு. நாக்கில் உணவின் சுவை மறைந்த பின்னர் சாப்பாட்டுக் கூழ்மத்தினை வயிற்றிற்கு அனுப்பு.
- உணவினை உமிழ்நீர் கலந்து சுவைத்து சாப்பிடு. உதடு பிரிந்தால் உமிழ்நீர் கலக்காது. உதடுகள் பிரிக்காமல் உணவினை உமிழ்நீருடன் அரைத்து கூழ்மமாக்கிச் சாப்பிடு.
- சாப்பிடும்பொழுது கவனம் வேறெங்கும் சிதறவேண்டாம். உணவினில் கவனம் எளிதில் செரிக்க உதவும். உமிழ்நீர் சுரக்கும்பொழுது சற்றேறக்குறைய 500 வகையான சுரப்பிகள் சுரக்கின்றன. உணவு உண்பதனில் கவனம் சிதறும்பொழுது உமிழ்நீர் சுரப்பதில்லை.
- டெக்னிக்: உதடுகளை மூடி கண்களை மூடிக்கொண்டு மெல்லும்பொழ்து உணவின் மீது முழு கவனம் கிடைக்கும். இது ஒரு தியானம்.
- உணவினை உமிழ்நீருடன் கலந்து பற்களால் கூழ்மம் ஆக்கவும்
- சாப்பிடும் முன்பாக அரைமணிநேரம் நீர் அருந்தாதே. சாப்பிட்டபின்னர் அரை மணிநேரம் நீர் அருந்தாதே. சாப்பிடும்பொழுதும் நீர் அருந்தாதே. தவிர்க்க இயலா காரணங்களினால் நீர் அருந்த நேரிட்டால் அது நாக்கினையும் தொண்டையையும் நனைப்பதாக மட்டும் இருக்கட்டும்.
சாப்பிடும்பொழுது தவிர்க்கவேண்டியவை:
- தொலைக்காட்சி, வானொலி கவனித்துக்கொண்டு சாப்பிடாதே.
- புத்தகம் படிக்காதே.
- எவருடனும் உரையாடாதே.
- கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உணவருந்தாதே ! சம்மணங்கால் இட்டு அமரும் நிலையிலேயே உணவருந்து.
- அம்மாக்கள் குழந்தைகளுடன் உட்கார்ந்து உணவருந்தவேண்டாமே !
- முகம் கை கால் அலம்பிய பின் உணவருந்திடு.
- குளித்துமுடித்தபின்னர் முக்கால் மணி நேரத்திற்கு உணவருந்தாதே. உணவருந்தியபின் இரண்டரை மணி நேரம் வரை குளிக்காதே.
- இயற்கை உணவு எதை வேண்டுமானாலும் சாப்பிடு.
- பசிக்கும்பொழுது மட்டும் உணவு கொள். அதை மனதிற்குப் பிடித்த மாதிரி ரசனையுடன் சாப்பிடு
- ஏப்பம் வரும்வரை திகட்டும்வரை உணவருந்து. ஏப்பம் வந்தபின் உணவருந்துவதை நிறுத்திவிடு. (ஏப்பம் – இரைப்பையில் வேலை முடிந்து உணவு சிறுகுடலுக்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதற்கான உடலின் சமிக்ஞை. உணவருந்தும்பொழுது ஏப்பம் வந்தால் நீங்கள் சரியான முறையில் உணவருந்தியதாய் பொருள்.)
.
6 comments:
Just beautiful!
அருமை!நன்றி.
Very Nice. Thanks lot for nice information.
-Vanji
Miga Arumai sir mikka Nandri
Miga Arumai sir mikka Nandri
arjun
பல நல்ல விசயங்கள், ரொம்ப லேட்டாதான் தெரிகிறது, உங்க தளம் இத்தனை நாள் தெரியாம போய்விட்டதே...
Post a Comment