Sunday, January 13, 2013

சித்தர் பாடல் –உட்பொருள் விளக்கம்



சித்தர் பாடல் –உட்பொருள் விளக்கம்

யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே
                               
-       திருமூலர்.

என்னுடைய பொழிப்புரை:

பொதுவாக எல்லா உரையாசிரியர்களுமே ‘அகர முதல எழுத்தெல்லாம்..’ என்ற குறளுக்கு இப்படி உரை எழுதுகின்றனர்.

’அனைத்திற்கும் காரணமான இறைவனை வணங்குவோமாக என்ற பொருள்பட வெவ்வேறு வார்த்தை ஜாலங்களில் எழுதுகின்றனர்.

சித்தர்களும் சரி , வள்ளுவரும் சரி இறைவனை வணங்க வேண்டும். இல்லாவிடில்..? ‘ என்று எங்கேயும் குறிப்பிடவில்லை..  

இந்தப் பாடலின் உட்பொருளானது,

முதல்வரி:
>>> யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை <<<

எல்லா உயிரிகளிலும் இருப்பது  (Universal Magnetism) எனப்படும் வான்காந்தமானது ஜீவகாந்தமாய் (Bio-Magnetism) தன்மாற்றமடைந்த பரிணமிப்பே  

பச்சிலை என்று குறிப்பிடுவது கவனிக்கப்படவேண்டும். காய்ந்த இலை அல்லது சருகு என்று திருமூலர் குறிப்பிடவில்லை.  காய்ந்த இலைகளில் ஜீவகாந்தம் இருப்பதில்லை.  அதாவது இலை மரணித்துவிட்டது. உயிர்களில் ஜீவகாந்தம் உள்ளது.

இறந்த இலையில் இறைவன் இல்லையா ? என நீங்கள் கேட்கலாம்.  எல்லாமே இறைத்துகள்களால் ஆனவை. இன்று விஞ்ஞானிகள் கூறும் Boson Particle அல்ல இறைத்துகள்.  அது அதற்கும் நுண்ணிய ஒன்று. இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை நம்மால்.  Fundamental Energy Particle. இதனையே நம் முன்னோர்கள் பரமாணு என்கின்றனர்.

அதாவது உயிருள்ளவைகளில் கண்டிப்பாக ஜீவகாந்தம் இருந்தே ஆகவேண்டும் என்பது முதல்வரியின் பொருள்.

”இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிரிகளுக்குமே ஜீவகாந்த ஆற்றல் இருக்கின்றது “ என ஒற்றை வரியில் உரை எழுதிடலாம்.

விளக்கம்::

முதலில் ஜீவகாந்தம் (Bio-Magnetism) என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.

ஒரு செடி வளர்கின்றது. துளிர்விட்டு நன்கு பசுமையாகக் காட்சியளிக்கின்றது. அதனைப் பாதியாகக் கத்திரித்துவிட்டு வேறு இடத்தில் நட்டு வைத்தால் அது பட்டுப் போகின்றதே ஏன்….?

அந்த இடத்தில் ஜீவகாந்தத்தில் வெட்டு ஏற்பட்டு ஜீவகாந்தம் இழக்கப்பட்டு மரணித்து விடுகின்றது.

இதே முறைதான் எல்லா உயிரினங்களுக்கும். ஒரு செல் அமீபாவாகட்டும்; டினோசராகட்டும். இதுதான் முறை. எப்பொழுது ஜீவகாந்தம் இழக்கப்படுகின்றதோ அப்பொழுது மரணம் சம்பவிக்கின்றது.

மைநோக்குவிசை (Centripetal Force) . மையவிலக்கு விசை (Centrifugal Force) தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டேயிருக்கின்றது உயிரினங்களில். மையவிலக்கு விசை அதிகமாகும்பொழுது மரணம் ஏற்படுகின்றது.

இங்கே பச்சிலை என திருமூலர் குறிப்பிடுவதை நாம் நினைவினில் கொள்ளவேண்டும். சருகு என்றோ அல்லது காய்ந்த இலை என்றோ அவர் குறிப்பிடவில்லை.

பசுமையில் ஜீவகாந்தம் அதிகம்; உயிரினங்களில் இளமையில் ஜீவகாந்தம் அதிகம். அதனால்தான் குழந்தையின் முகத்தில் ஒரு வசீகரம். அது செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு ஆகர்ஷ்ணம். அதனாலேயே குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கின்றது.

முதல்வரியின் உட்பொருள் ‘ அனைத்து உயிர்களுக்கும் ஜீவகாந்தம் உள்ளது’.

எனவே உயிராற்றலை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்தால் 106 வயதிலும் இளமையாக இருக்கலாம்.

இனி இரண்டாவது வரிக்கு விளக்கம் பார்க்கலாம்.

>>> யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை <<<

இந்த வரி மிகவும் நுட்பமானது.

இங்கே ’யாவர்க்கும்’  என்பது மானிடர்களை மட்டுமே குறிப்பிடுகின்றார்.

பசுவினை இங்கே திருமூலர் குறிப்பிடக் காரணம் என்ன ? எத்தனையோ உயிரினங்கள் இருக்க திருமூலர் பசுவினை மட்டும் தனியாகக் சுட்டுவதேன் ?

பசுவின் உயிர்ச்சுழல் Clockwise Directionல் சுழல்கின்றது.  மனிதனின் உயிராற்றலும் இதே போல் கடிகார முள் சுற்றும் திசையிலேயே சுழல்கின்றது.

ஒவ்வொரு உயிரிகளுக்கும் உயிர்ச்சுழலானது ஒன்று கடிகார முள் சுற்றும் திசையில்  சுழலும் அல்லது எதிர் கடிகாரச்சுற்றில் உயிராற்றல் சுழலும் என்பது நியதி.

உதாரணமாக பன்றிக்கு எதிர்க்கடிகாரச் சுற்றில் உயிராற்றல் சுழல்கின்றது.

கடிகாரச்சுற்றில் உயிராற்றல் சுழலும் உயிரினங்கள்  எதிர்க்கடிகாரச்சுற்றில் உயிர்ச்சுழல் சுழலும் உயிரினங்கள் சந்திக்கும்பொழுது ஜீவகாந்த இழப்பு ஏற்படுகின்றது.

மனிதன் பன்றிக்கருகே செல்லும்பொழுது ஜீவகாந்த இழப்பு ஏற்படுகின்றது. பிணத்திற்கருகே செல்லும்பொழுது ஜீவகாந்த இழப்பு ஏற்படுகின்றது. Non-Veg என்றழைக்கப்படும் உணவுகளைச் சாப்பிடும்பொழுதும் இதுவே நிகழ்கின்றது.

சில சூழ்நிலைகளால் உயிராற்றல் கடிகாரச்சுற்றிற்கு எதிராக சுழல ஆரம்பித்தால், நாம் நம் ஜீவகாந்தத்தினைக் தற்காத்துக்கொள்ளக்கூடிய உபாயம் அறிந்திருக்கவேண்டும் என சித்தர்கள் மிகத் தெளிவாகச் சொல்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் அது எதிர்மறையாகச் சுழல ஆரம்பித்தால் ஜீவகாந்தம் இழக்கப்பட்டு இறுதியில் மரணத்தில் முடியும்

.>>> யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை <<<

அதிக ஜீவகாந்தம் கொண்டோர் தன் ஜீவகாந்தத்தினை நோயுற்றவர்களின் மீது பாய்ச்சி  நோய்களைக் குணப்படுத்த இயலும்.

ரிஷிகள் ஆசியளித்து நோய்கள் குணமாவதன் மர்மம் அங்கே ஜீவகாந்தப் பரிமாற்றமே. உடலில் நோய்கள் வர மூல காரணமே ஜீவகாந்த குறைவால் விளைவதே.

உடலில் கண்ணுக்குப் புலப்படா ஆராவில் முதலில் ஓட்டை விழும். அந்த ஓட்டையின் மூலம் ஜீவகாந்தம் லீக் ஆகிக்கொண்டே இருக்கும். பின்னர் அது எந்தப் பகுதியில் அதிகமாய் லீக் ஆகின்றதோ அந்த உறுப்பு நோய்வாய்ப்படுகின்றது.

அதனை தற்காலிகமாக வெளியிலிருந்து ரசாயணங்களை அனுப்பி நாம் சரிசெய்ய முயல்கின்றோம்.  துளை அடைபடாமல் போனால் வலி, நோய்யாகி .. நோய் ரணமாகி... பின்னர் நிரந்தர படுக்கை நோயாளியாகின்றான்.

ஜீவகாந்தம் லீக் ஆகும்பொழுது அதற்கு shield பண்ணக்கூடிய நுட்பம் தெரிந்துகொள் என்கின்றார் திருமூலர்.,

சித்தர்களின் பாடல்களிலும் திருக்குறளிலும் ஆழ்ந்த உட்பொருட்களடங்கியிருக்கின்றன. ஏனோ தெரியவில்லை யாருமே அதன் நுட்பமான நுட்பங்களை விளக்கி உரை எழுதவில்லை. அகர முதல் எழுதெல்லாம்...என்ற குறளுக்கு அனைத்திற்கும் மூலமான கடவுளை வணங்கு என்றே பொத்தாம் பொதுவாகச் சொல்வது எனக்கு மிகுந்த வருத்தத்தையே தருகின்றது.

இதேபோல் ஒரு முறை சித்தர்பாடல்கள் பொழிப்புரையுடன்... என்று ஒரு புத்தகம் திருவல்லிக்கேணி நடைபாதையில் கண்டெடுத்து ஆர்வமாகப் பிரித்துப் படித்தால்... என்ன சொல்ல...?

ஆடு பாம்பே... என்ற பாடலுக்கு... இந்த சித்தர் (பாம்பாட்டிச் சித்தர்)  பாம்புகளுடன் அதிக பரிச்சயம் உடையவர். இவர் பாம்புகளை ஆராய்ந்தவர். அதனுடன் விளையாடுவது இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று… இப்படி போகின்றது உரை. பாம்பாட்டிச் சித்தர் குறிப்பிடுவது குண்டலினி யோகம்.


>>>யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை <<<
கையுறை - கைக்கவசம், வழங்கி உதவு , any offering taken by one who goes to see a great personage , visiting presents .

இங்கே இப்படியும் பொருள் கொள்ளலாம்.


உன் ஜீவகாந்தம் இழக்காமல் தக்க பாதுகாப்பினை கைக்கொள் என்றும் கொள்ளலாம். உன்னிடம் இருக்கும் அதிகப்படியான ஜீவகாந்த ஆற்றலை தேவைப்படும் பிறருக்கு அளித்து உதவிடு என்றும் பொருள் கொள்ளலாம்.

ரிஷிகள் ஆசி வழங்குவது தங்களுடைய அதிகப்படியான ஜீவகாந்தத்தினை ஜீவகாந்தம் குறைவானவர்களுக்கு தங்களின் உள்ளங்கைகளின் மூலமும் கண் பார்வையின் மூலமும் அருள்கின்றனர். இதனையே அருள்பாலித்தல் என்கின்றனர்.


>>>>
யாவர்க்குமாம் உண்ணும்போது ஓர்கைப்பிடி <<<<<<<<<<
சித்தர்களின் வாழ்வியல் முறையில் இதுதான் மிகவும் சூட்சுமமான ஒன்று.


சித்தர்கள் சாப்பிடும் முன்னர் ஒரு கைப்பிடி உணவினை உள்ளங்கையில் வைத்து அதிலுள்ள ஆற்றலைத் தன் உடலிற்கு ஒத்துக்கொள்ளும்படியான ஜீவகாந்தமாக மாற்றும் ஒரு உத்தி.

ஒரு கைப்பிடி கவள உணவினை உள்ளங்கையில் வைத்தபடி மூலாதாரத்தில் இருக்கும் உயிராற்றலை உணவுடன் இணைத்து மூளைக்குச் செலுத்தி அங்கே பதங்கமாக்கிய பின்னர் உடலிலுள்ள அனைத்து செல்களிலும் அந்த உணவின் மீநுட்பமான ஆற்றலைப் பாய்ச்சும் ஒரு உத்தி.

இதனால் உடல் இளமை பெறும். முகம் தேஜஸ் ஆகும். உணவு உடலிற்கு ஊறு செய்யா.

>>>>>>>>>>
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே <<<<<<<<<<
முள்வைத்துக் குத்தினாலும் ஒரு முனிவர் (நிஜமான முனிவர்) சாபம் இடுவதில்லை.  மாறாகத் தன்னை துன்புறுத்தும் அந்த அன்பரை இறைநிலையிலிருந்து வாழ்த்துவர். நாமும் நம் அன்றாட வாழ்வினில் பிறரை வாழ்த்த வாழ்த்த எல்லாருமே நம்முடன் இசைவாகவே நட்பு பாராட்டுவர். அருட்கருணை பொங்கி வழியும். கோபம் வருவதில்லை.


வாழ்த்த  வேண்டுமெனில் வாய்விட்டு எல்லோருக்கும் கேட்கும்படியாக அல்ல; மனதிற்குள் வாழ்த்தினாலே போதும். அப்படி தொடர்ந்து வாழ்த்தும்பொழுது நம்மைச் சுற்றி அவரைப் பற்றிய நல்லெண்ணங்கள் மூளையிலுள்ள நியூரான்களால் Broadcast செய்யப்படும். இது அந்த நபரின் Sub-Concious Mindனுள் ஆழமாக அவரை அறியாதே உட்செலுத்தப்படும்.

மனோவியலில் Subliminal message என்ற ஒன்றினை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.  புறக்காரணிகள் எதுவும் இன்றி அடுத்தவரின் மனதினுள் நம் எண்ணங்களை விதைத்தல்.

6 comments:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அற்புதமான மறைபொறுள் விளக்கம் .வேறு ஏதோ ஒரு நிலையில் நின்று உணர்ந்து எழுதபட்ட பதிவு இது .தொடருங்கள் .பின்பற்ற ஆசை .

Anonymous said...

miga nandraga irundhathu. idhu bondru ella padalkalukkum vilakkam eluthungal.

Unknown said...

நன்றி

Unknown said...

நன்றி,கவசம் பற்றி தயவு செய்து மேலும் விளக்கவும்.

Murlitrilok said...

Dont agree,Thirumoolar demonstrates his immense love in this song and this is a simple advisory song for conducting life.Not all his songs are loaded with philosophical overtones. All words in this song bear direct simple tamil meaning .This is simple enough to allow multiple interpretations. His first song ,for example, can be debated for numerous interpretation.
Just a humble opinion born out of intense soulful association with Thirumoolar's songs.
God bless all

Unknown said...

அற்புதம்