Thursday, May 17, 2018



                               பால்யம்-2


எங்கள் ஊரில் நாச்சியாரம்மாள் என்ற தேவதை அவதரித்ததாய் ஐதீகம். தென் திருப்பதி என்றழைக்கப்படும் திருத்தங்கல்லிலிருந்து நாராயணசாமி நாச்சியாரம்மாள் தம்பதி சமேதரராக வருடந்தோறும் பங்குனி மாதம் வருகை புரிவர். 

தீபாவளி எல்லாம் நாங்கள் சிறப்பாகக் கொண்டாட மாட்டோம். இந்த ஒரே ஒரு பண்டிகை மிக விமரிசையாகக் கொண்டாடுவோம். ஒரு மாதத்திற்கு முன்பே திருவிழா களை கட்ட ஆரம்பித்துவிடும். ஒவ்வொரு வீட்டிலும் முறுக்குச் சுடுவது அவசியம். காலப்போக்கில் முறுக்குச்சாமித் திருவிழா என மருவிப்போனது. 

என் கைவண்ணத்தில் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடனும் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடனும் கம்பங்கஞ்சி, கேப்பைக் களி, கூழ், வெந்தயக் களி, உளுந்தங்களி ( நடுவில் பள்ளம் வெட்டி நல்லெண்ணெய் ஊற்றி குளம் போல் நிரப்பி ஒரு வெல்லக் கட்டியைப் புதைத்துவைத்து…. சாப்பிட்டால்… ஆஹா… அதன் ருசி சொர்க்கம்…), குருதவாலிச் சோறு, தினை வகைகள் என ஆரோக்கியான உணவு. இட்லி தோசை நெல்லுச்சோறெல்லாம் விவசாய வீட்டில் மிக மிக அரிதான ஒன்று (எங்கள் வீட்டில் குழந்தைச்சோற்றிகாகத் தனியாக அவர்களுக்கென வயலில் விளைந்த நெல்லில் கைக்குத்தலரிசிச் சோறு சமைப்பது வழக்கம் )

ஏராளமான கீரைகளும் பருப்பும் தினசரி உணவில் எதாவது ஒரு வடிவில் இருக்கும். இந்த பால்ய கால நினைவலைகளை வைத்து பின்னப்பட்டு எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்த சிறுகதையே லயம் என்ற கதையாகும். http://rishiraveendran.blogspot.com/2012/11/blog-post.html

மொத்தத்தில் என் பால்ய காலப் பருவம் மிகவும் ஆரோக்கியமான சூழல் + ஆரோக்கியமான உணவுகள் + ஆரோக்கியமான விளையாட்டுக்கள் என அமைந்தது மிக்க மகிழ்ச்சியாகவே இந்த நொடியிலும் இருக்கின்றது.


No comments: