Thursday, May 17, 2018



                               பால்யம்-2


எங்கள் ஊரில் நாச்சியாரம்மாள் என்ற தேவதை அவதரித்ததாய் ஐதீகம். தென் திருப்பதி என்றழைக்கப்படும் திருத்தங்கல்லிலிருந்து நாராயணசாமி நாச்சியாரம்மாள் தம்பதி சமேதரராக வருடந்தோறும் பங்குனி மாதம் வருகை புரிவர். 

தீபாவளி எல்லாம் நாங்கள் சிறப்பாகக் கொண்டாட மாட்டோம். இந்த ஒரே ஒரு பண்டிகை மிக விமரிசையாகக் கொண்டாடுவோம். ஒரு மாதத்திற்கு முன்பே திருவிழா களை கட்ட ஆரம்பித்துவிடும். ஒவ்வொரு வீட்டிலும் முறுக்குச் சுடுவது அவசியம். காலப்போக்கில் முறுக்குச்சாமித் திருவிழா என மருவிப்போனது. 

என் கைவண்ணத்தில் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடனும் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடனும் கம்பங்கஞ்சி, கேப்பைக் களி, கூழ், வெந்தயக் களி, உளுந்தங்களி ( நடுவில் பள்ளம் வெட்டி நல்லெண்ணெய் ஊற்றி குளம் போல் நிரப்பி ஒரு வெல்லக் கட்டியைப் புதைத்துவைத்து…. சாப்பிட்டால்… ஆஹா… அதன் ருசி சொர்க்கம்…), குருதவாலிச் சோறு, தினை வகைகள் என ஆரோக்கியான உணவு. இட்லி தோசை நெல்லுச்சோறெல்லாம் விவசாய வீட்டில் மிக மிக அரிதான ஒன்று (எங்கள் வீட்டில் குழந்தைச்சோற்றிகாகத் தனியாக அவர்களுக்கென வயலில் விளைந்த நெல்லில் கைக்குத்தலரிசிச் சோறு சமைப்பது வழக்கம் )

ஏராளமான கீரைகளும் பருப்பும் தினசரி உணவில் எதாவது ஒரு வடிவில் இருக்கும். இந்த பால்ய கால நினைவலைகளை வைத்து பின்னப்பட்டு எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்த சிறுகதையே லயம் என்ற கதையாகும். http://rishiraveendran.blogspot.com/2012/11/blog-post.html

மொத்தத்தில் என் பால்ய காலப் பருவம் மிகவும் ஆரோக்கியமான சூழல் + ஆரோக்கியமான உணவுகள் + ஆரோக்கியமான விளையாட்டுக்கள் என அமைந்தது மிக்க மகிழ்ச்சியாகவே இந்த நொடியிலும் இருக்கின்றது.


பால்ய பருவம்-1

பால்ய பருவம்-1


என்னுடைய பால்ய பருவம் முழுக்க முழுக்க குக் கிராமத்திலேதான். மின் வசதி இல்லாத வீடு. லாந்தர் விளக்கு. தெருவில் ஃப்யூஸாகிப் போன ஒரு 40 வாட்ஸ் பல்பு தெருவிளக்காய் இருளை அள்ளி அள்ளி வீசிக்கொண்டிருக்கும். 


வானொலியில் இரவு 7:30 டில்லியிலிருந்து, “ஆகாஸ் வாணி... செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்சாமி...” என்ற குரலில் செய்தி கேட்போம். அந்தத் தெருவிலேயே எங்கள் வீட்டில்தான் முதன் முதலாக PHILIPS Transistor Radio வாங்கினோம். அதற்கு வருடா வருடம் லைசன்ஸ் வேறு ரினிவல் பண்ணினோம். 

அந்தப் பூச்சாண்டியை இப்பவே பிடிச்சிக்கொடு. பூச்சாண்டியைப் புடிச்சிக் கொடுத்தால்தான் சாப்பிடுவேன்... என ஒரே அழுகை.

அந்த அன்னையோ, “ சும்மா இருந்த குழந்தையை இப்படிப் பண்ணிட்டியே...” என என்னை விரட்ட... நான் பின்னங்கால்கள் பிடரியில் பட, “குய்யோ.... முறையோ....” என ஓடினேன்.



செய்திகள் முடிந்தபின் உழவர் உலகம் என்ற ஒரு நிகழ்ச்சி . “மண்ணையெல்லாம் பொன் கொழிக்கச் செய்திடுவோம்.... அதில் பன்மடங்கு உற்பத்தியைப் பெருக்கிடுவோம்.... டட்டண்ட்டங்....டட்டண்டங்...” என்ற பாடலுடன் விவசாய விளக்கங்கள் ஒலிபரப்பாகும். அது முடிந்தவுடன் எல்லோரும் தூங்கிவிடுவோம்.

பெரிய விவசாய வீடு என்பதால் வீடு நிறைய எப்பொழுதும் ஜேஜே என ஊரும் உறவும் இருக்கும். எங்கள் பண்ணையாட்கள் எங்கள் வீட்டுடன் ஒரு உறுப்பினராக எப்பொழுதும் எங்கள் வீட்டிலேயே கலகலப்பாக இருப்பர். எங்கள் வீட்டினை ஒட்டியே அவர்களுக்கும் வீடுகள் கட்டப்பட்டிருந்தது. அதிகாலையிலேயே விழித்தெழுந்து மாடுகளுக்குரிய நியமங்கள் ஆரம்பமாகும். பால் கறப்பவர் பாலைக் கறந்து எங்கள் தெரு மக்களுக்கு விநியோகிப்பார் இலவசமாகவே.

அத்தெருக்குழந்தைகள் அனைவருமே எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கெனத் தனியாக குழந்தைச் சோறு சமைப்பர். பக்குவமாய் குழைந்த சாதத்துடன் பருப்பும் நெய்யும் கலந்து என் அன்னை அளிப்பார் குழந்தைகளின் அன்னையர்களுக்கு. சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரே அன்னையர்கள் அனைவரும் அமுதை நன்கு பிசைந்து குழந்தைகளுக்கு விளையாட்டினைக் காட்டி ஊட்டுவர்.

ஒரு முறை ஒரு குழந்தை உண்ண அடம் பிடித்தது. அப்பொழுது நான் 4ஆம் வகுப்பு. அந்தப் பக்கமாய் ஓடிக்கொண்டிருந்த என்னை அக்குழந்தையின் தாய் குழந்தையை கொஞ்சம் சாப்பிட மிரட்டும்படிக் கேட்டுக் கொண்டார்.

எனக்கோ மற்றற்ற மகிழ்ச்சி. ஏனெனில் முதன் முதலில் நான் மிரட்டினால் குழந்தை பயப்படும் என்ற அந்தத் தாய் என் மீது வைத்த நம்பிக்கை என்னை உற்சாகப்படுத்தியது. அடடே... நான் பெரிய பையனாகிவிட்டேன் என்று மனதினில் ஒரே உற்சாகம்.

அருகில் சென்று, “பாப்பா... ஒழுங்கா சாப்பிடு... இல்லேன்னா உன்னைப் பூச்சாண்டி கிட்டே பிடிச்சிக் கொடுத்திடுவேன்...” என்றேன் சற்றே மிரட்டல் தொணியில்.

அந்தப் பாப்பா சிறிது நேரம் என் முகத்தையே உற்றுப் பார்த்தது. பின்னர்... ஓ வென அழ ஆரம்பித்தது.

இரவு 8 மணிக்கெல்லாம் ஊர் உறங்கிவிட்டாலும் நாங்கள் வாண்டுகள் ஊருக்கு வெளியே வட்ட மேஜை மாநாடு நடத்திக் கொண்டிருப்போம். குறிப்பாக முனி, பேய், பூதம் என்று பயமுறுத்தும் இடங்களில்தான் எங்கள் ஜமா ஆரம்பிக்கும்.