Thursday, February 21, 2013

ரிஷிமொழிகள்




ரிஷிமொழிகள்
1)     ஒன்றுமில்லாததில் அனைத்தும் உள்ளடங்கியிருக்கின்றது.  - ரிஷிமொழி 20121011-00.0
2)     வாய் காக்கின் நோயுண்டோ…? - ரிஷிமொழி 20121011-01.0
3)     சமையல் எளிமையாக, சமையல் மேடையும் பாத்திரங்கழுவும் நீர் மேடையும் வெற்றிடமாகவும் சுத்தமாகவும் வைத்திரு. –ரிஷிமொழி 20121011-02.0
4)     நேரெதிர் திருமணத்திற்கு முன்னும் பின்னும் – ரிஷிமொழி 20121013-03.0  
5)     செயலில் நினைவு விளைவில் சிறப்பு – ரிஷிமொழி 20121013 -04.2
6)     திருத்த விழையும்பொழுது விரிசல் விரும்பி வரும் – ரிஷிமொழி 20121013 -05.0
7)     கடனை உடனே அடை.  ரிஷிமொழி  20121013 -06.0
8)     நினைத்ததெல்லாம் நடப்பதில்லை; நடந்ததெல்லாம் நாம் நினைத்ததில்லை.  ரிஷிமொழி 20121013 -07.0
9)     உறவு நலம் காக்க ஈர்ப்பிருக்கும் அளவிற்கு இடைவெளி பேண் – ரிஷிமொழி 20121013 -08.0
10)   ஈகையினால் உறவு பலப்படும்.  – ரிஷிமொழி   20121013 – 09.0
11)   பொருளாதாரத்தில் சுயக்கட்டுப்பாடில்லா மனம் இழிநிலையை ஈர்க்கும். – ரிஷிமொழி 20121013 -10.0
12)   கவலைகளை மற; இலட்சியத்தை நினை – ரிஷிமொழி 20121013 -11.0
13)   எப்பொழுதும் உற்சாகமாய் இரு – ரிஷிமொழி 20121013 -12.0
14)   அறிவுரை உரைப்பது தவிர்; இலட்சியத்திற்கு வழி பகிர் – ரிஷிமொழி 20121025 -13.0
15)   ஆற்றல் குறையின் இலட்சியம் தோற்கும் – ரிஷிமொழி 20121025 -14.0
16)   மீதூணுடன் சோம்பலொழித்து புறங்கூறல், பயனில சொல்லல், நிந்தித்தல் தவிர்த்து புன்மொழி குதர்க்கம் பேசலொழித்து நிஷ்காம்ய கர்மம் கைக்கொண்டு அசையாத நடுநிலையுடன் அளவற்ற பொறுமையுங் கொண்டொழுகின் மடையெனப் பெருகுமே மகிழ்ச்சி !    -ரிஷிமொழி 20121025 -15.0
17)   வீண் விகடம் பேசேல்.  – ரிஷிமொழி 20121025 -16.0
18)   வலிமை போயின் எலியும் புலிக்கு எசப்பாட்டு பாடும்  - ரிஷிமொழி 20121102 -17.0
19)   பெரிய மாளிகையை வெட்டவெளியில் மனதினில் படமாகக் காணுங்கள். சின்னச் சின்னச் செங்கற்களை வெட்டவெளியில் மன பிம்பத்துடன் அடுக்குங்கள். மாளிகை தயார்.  –ரிஷிமொழி 20120511 -18.0
20)   உறவுகள் முறியலாம்; அன்பு முறிவதில்லை –ரிஷிமொழி 20121113 -19.0
21)   பிறர் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு காயப்படுத்தும்பொழுது அமைதியாக அவரை மனதிற்குள் வாழ்த்திக்கொண்டிருங்கள்  -ரிஷிமொழி 20121113 -20.0
22)   மனதினுள் முதிர்ச்சி….நட்பினில் வளர்ச்சி… -ரிஷிமொழி 20121113 -21.0
23)   மனம் சுருங்கின் நட்பும் சுற்றமும் சுருங்கும்  -ரிஷிமொழி 20121113 -22.0
24)   ஒத்த அதிர்வெண் கொண்ட நட்புகளே துளிர்த்து வளர்கின்றன. –ரிஷிமொழி 20121113 -23.0
25)   மனதினை விரிக்கின் வளங்கள் விரியும்.  –ரிஷிமொழி 20121113 -24.1
26)   எதையும் எதிர்பாராது காலத்தால் செய்யும் உதவிகளை வாயில்லா ஜீவனும் மனதிற்குள் கண்ணீர்விட்டுத் தொழும்.    –ரிஷிமொழி  20121113 -25.0
27)   உங்களின் எண்ணம் சொல் செயல் பிரபஞ்சத்திலும் உங்களின் கருமையத்திலும் பதிவாகி உங்களின் அடுத்தடுத்த எல்லா தலைமுறையின் கருமையத்திலும் (Bio-Genetic Centre) அதே நிரல்கள் கடத்தப்பட்டு பிரபஞ்ச விதிகளை ஈர்க்கும். உங்களின் சந்ததியினருக்கு நீங்கள் சேர்க்க வேண்டிய ஒரே சொத்து கருமையத் தூய்மை.           – ரிஷிமொழி 20121113 -26.0
28)   நல்லன நோக்கின் அல்லன மறையும்.   –ரிஷிமொழி  20121208 -27.1
29)   வருவாய் முடங்கும்பொழுது எதிர்பாரா செலவினங்கள் மிகும். –ரிஷிமொழி 20121208 -28.0
30)   உபயோகமற்ற பொழுதுகளில் எப்பொழுதும் மும்மரமாகவே இருப்பதியல்பு –ரிஷிமொழி 20121208 -29.1




No comments: