Wednesday, October 18, 2006

சந்தித்தேன்...சிந்தித்தேன்...

நண்பர்களே... நலமா...?

நேற்று (20,Aug2006) நம் நண்ப்ர்கள் ராமா, நடேஷன் அண்ணா, காழியூரார் அவர்களையும் அதன் பின்னர் விசாலம் அம்மா அவர்களையும் சந்திக்கும் பேறு பெற்றேன்...

என்னிடம் இருந்த ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் Surf Excel போட்டு வெளுப்பாக்கிவிட்டனர்.

எங்கள் சந்திப்பு சென்னைஅசோக் நகர் ஆஞ்சநேயர் கோயிலில் ஆரம்பித்தது. நான் ஒரு ஓரமாய் கண் மூடி அமர்திருக்கும்பொழுது திரு. ராமா என்னுடன் ஜமாவானார்.

ராமாவைப் பற்றி நான் சொல்லியா தெரியவேண்டும்...?

சுந்தர காணடத்தில் அனுமான் ஒரு சமயம் மனம் தளர்ந்து உட்கார்ந்தபொழுது,

"அநிர்வேத ஸ்ரியோ மூலம் அநிர்வேத: பரம் ஸுகம்:அநிர்வேதோ ஹி ஸததம் ஸர்வார்த்தேஷு ப்ரவர்தக::"

என்றொரு ஸ்லோகம் வரும். அதாவது உற்சாகமே ஜயம் என்ற பொருள் பட அனுமனை Motivation பண்ணிய ஸ்லோகம்...

உற்சாகம் வேண்டுமானால் நம் ராமாவை அழைக்கலாம்...

திரு. நடேசன் அண்ணா அவர்களுடன் chat பண்ணியபொழுது, அவர் ஒரு சிறிய பையன் என்றே எண்னணியிருந்தேன்.

கடலூருக்கு அருகே புவனகிரியிலிருந்து எனக்கொரு சிஷ்யன். அவன் மிகவும் சின்னப் பையன். சென்ற வருடம் படிப்பை முடித்திவிட்டு என்னுடன் சிறிது காலம் இருந்துவிட்டு பின்னர் Patni comuters, Pune ல் join பண்ணிவிட்டான்.

நடேசன் அவர்களையும் அப்படியே எண்ணிக்கொண்டு chat தொடர்ந்தேன். ஆனால் நேற்று சந்தித்த பொழுது முழு பிம்பமும் மாறிவிட்டது.

அவரது சமூக சேவை மிகவும் புனிதமானது. விவேகானந்தர் சொன்னது இங்கே நினைவிற்கு வருகிறது.

" வேதங்களை ஓதுவதைவிட, உபநிஷத்தில் பாண்டித்தியம் பெற்று பிதற்றிக்கொண்டிருப்பதைவிட... பசித்தவனுக்கு ஒரு ரொட்டித்துண்டு கொடுப்பவனே இறைவனுக்கு செய்யும் உண்மையான தொண்டு..."நடேசன் அண்ணா அவர்கள் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்...

காழியூரார் பற்றி...

குழந்தையின் இதயமும், ஞானியின் ஞானமும், இளைஞனின் உற்சாகமும் என பாரதி வேண்டிய அத்தனை குணங்களும் நிறைந்தவர். அவரைப் பற்றி ஆராய்ந்தபொழுது மிகப் பெரிய சில உண்மையான உண்மைகள் தெரிய வர ஆரம்பித்தன... பின்னால் தொடர்கிறேன்...

விசால‌ம் அம்மா அவர்களது வீட்டிற்கு சென்றேன்.

நாம் கோவிலுக்கு சென்றிருக்கிறோம். ஆனால் வீடே கோவிலானால்...? அவர் வீட்டினில் அடியெடுத்து வைத்ததுமே ஒரு தெய்வீக உணர்வை உணர்ந்தேன்.
அவரது வாழ்க்கைத்துணை உடல் நலம் குன்றியிருந்தார். ஒரு அக்குபஞ்சர் மருத்துவர் ஊசியால் குத்திக்கொண்டிருந்தார்.

ஒரு முறை வேதாத்திரி மகரிஷியுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது,

"முள் வைத்து முனிவரைக் குத்தினாலும் அம்முனிவர் அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்..." என்றார்.

இங்கேயும் அதுதான் நடந்தது.

ஊசியால் குத்தியபொழுதும், வலியைப் பொறுத்துக்கொண்டு முகத்தில் புன்முறுவலை வரவழைத்துகொண்டு அகம் மகிழ வரவேற்றார்...

என்ன தவம் செய்தோனோ...
இப்படிப்பட்ட நல்ல மனிதர்களின் நட்பு கிடைப்பதற்கு...?

தொடரும்.....

No comments: