Tuesday, April 01, 2014

திருக்குறள் உட்பொருள் விளக்கம்





One of my article got presented at International Seminar பன்னோக்குப் பார்வையில் தமிழ்ச் செம்மொழி - March 2014






திருக்குறள் உட்பொருள் விளக்கம்               ரிஷி ரவீந்திரன்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
 (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:1)

இந்தக் குறளில் ஆழமான உட்பொருள் உள்ளுறையாகப் பொதிந்திருப்பதை நாம் உற்று நோக்கலாம். நான் இக்குறளில் பொதிந்திருக்கும் உட்பொருளாக Quantum Physicsஐ காண்கின்றேன்.

பொதுவாக இக்குறளுக்கு அனைத்து மொழிகளின் எழுத்திற்கும் அகரமே அடிப்படையாவது போல் உலகிற்கு ஆதி அல்லது மூலம் இறைவன் என வெவ்வேறு உரையாசிரியர்கள் வெவ்வேறு வார்த்தைகளில் பொழிப்புரை எழுதியிருக்கின்றனர்.

இங்கே அகரம் என்பதைக் காண்போம். வள்ளுவர் அகரம் என்பதை எந்தப் பொருளில் குறிக்கின்றார் என நாம் ஆரோய்வோமாக.  அனைத்து மொழிகளும் அகரத்தில் அதாவதுவில் ஆரம்பிக்கின்றது என்ற பொருளிலா ?

அனைத்து இந்திய மொழிகள் மற்றும் பழைய பாரசீக மொழி, தாய், பர்மா, ஸ்ரீலங்கா மற்றும் ஆசிய மொழிகளனைத்தும் அ, , , , , ஊ என்று ஆரம்பிப்பவை. அதுவே ஐரோப்பிய மொழிகளும் அரபும் ஏ,பி,சி,டி இவைகளையொத்து ஆரம்பிப்பவை. கிரேக்கமும் லத்தினும் Indo- European Language என்றழைக்கப்படுகின்றது. ஆல்ஃபா என்று ஆரம்பிப்பவை. ஆனால் சீன மொழியும், ஜப்பானிய மொழியும் மற்றும் கொரிய மொழியும் இதிலடங்கா. அவை முற்றிலும் மாறுபட்ட மொழிகள். இம்மொழிகளின் முதல் எழுத்து அகரமா என்றறிய முற்படலாம்.

திருமுருக கிருபானந்தா வாரியார் அவர்கள் ஒருமுறை அகரத்திற்கு இப்படி விளக்கம் அளித்தார். அ என்ற எழுத்தில் அகரம் , உகரம் மற்றும் மகரம் உள்ளுறையாக உள்ளது. அதாவது அ,,ம் என்பதாகும். இதில் அ என்ற எழுத்தின் ஆரம்பத்தில் ஒரு சுழல் உள்ளது என்றும் பின்னர் ஒரு அரைக் கோளமும் ஒரு நேர்கோடு இருக்கின்றது எனவும் அதிலேயே அகரம் உகரம் மகரம் உள்ளடங்கியுள்ளதென்றும் அது மூலத்தின் ஒலியைக் குறிக்கும் அஉம் என்ற ஒலி என்றும் குறிப்பு ஒன்றினை ஒரு உரையில் கொடுத்திருந்தார்.

அகரத்தில் ஆரம்பிக்காத மொழிகளும் இருக்கலாம்

எழுத்து என்ற வார்த்தையை நாம் உற்று நோக்குவோம். எழுத்து என்பது உருவம். அதாவது அருவத்திலிருந்து உருவம். பருப்பொருள்.  

இங்கே வள்ளுவரின் மெய்ஞானம் வெளிப்படுகின்றது. வள்ளுவர் வாழ்ந்த காலம் இன்றைக்கு இருப்பதைப் போன்று அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம் வளர்ச்சியடைந்திராத காலம் என்று கொள்ளலாம். வள்ளுவருக்கு எலக்ட்ரான்களைப் பற்றியோ அல்லது நியூட்ரான்களைப் பற்றியோ அல்லது மின்சாரத்தினைப் பற்றியோ கணிப்பானைப் பற்றியோ அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அருவத்திலிருந்து உருவம் வந்தது. ஒன்றுமில்லாததிலிருந்து எல்லாமே வந்தது என சித்தர்களின் கருத்துக்களைச் சொல்வதாய்த் தெரிகின்றது. Everything has Nothingness; But NOTHINGNESS has Everything. 

இந்தப் பிரபஞ்சம் உருவான கதையை பெளதிகத்தில் நாம் அறிவோம். வள்ளுவர் பிரபஞ்சம் என்ற வடமொழிச் சொல்லைப் பயன்படுத்தாமல் உலகு என்று பயன்படுத்தியிருக்கின்றார்.  உலகு என்பது நாம் வாழும் நில உருண்டை அல்ல, ஆதியும் அந்தமும் இல்லாத அனைத்தும். வடமொழியில் இதனை அண்டம் என்றும் பிரபஞ்சம் என்றும் குறிப்பிடுவதை நாம் அறியலாம்.

முதலில் இருந்தது வெட்டவெளி. சூன்யம்அதனுள்.

    1.   பேராற்றல்
    2.   பேரறிவு
    3 பூரணம்

என்ற முத்தரங்கள் இருந்தன.

தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தம் காரணமாக வெற்றிடம் சுழல ஆரம்பிக்கின்றது. சுழலும் எதுவும் கோளவடிவம் எடுப்பதியல்பு. வெற்றிடம் சுழல ஆரம்பிப்பது ஒரு மீ நுண்ணிய பருப்பொருள் போன்ற தோற்றத்தினை கொடுக்கவல்லது. இந்த மீ நுண்ணிய பருப்பொருளின் ஆரம் 10^ -47 mm ஆகும். Big-Bang என்னும் கோட்பாட்டின்படி பெருவெடிப்புக் கொள்கை 10^-57 m Secondல் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருக்கின்றது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நிறை-ஆற்றல் கொள்கைப்படி ஆற்றலை நிறையாகவும், நிறையை ஆற்றலாகவும் மாற்றவியலும் என்ற கொள்கையின்படி E = MC^2  என்ற சமன்பாடு நிறுவுகின்றது.

சுத்தவெளியிலிருந்த பேராற்றலானது. தொடர்ந்து பருப்பொருளாக உருமாற்றம் அடைந்துகொண்டே இருக்கின்றது. நியூட்டனின் ஈர்ப்பு-தள்ளு விசை விதியின்படி F= GMm / R^2  ஒத்த தகைமை கொண்ட துகள்கள் ஒன்றையொன்று ஈர்த்தும் விலக்கியும் பெரு நிறை கொண்ட பருப்பொருட்களாக உருமாற்றம் அடைகின்றது

அகர முதல எழுத்தெல்லாம்என்று வள்ளுவர் பயன்படுத்தியதன் உட்பொருள் இதுவேயாகும்

ஆதி பகவன் முதற்றே உலகு என்பதற்கு என்ன பொருள் ?

ஆதி என்றால் என்ன

இருப்பு நிலை.

பகவன் என்றால் என்ன ? பகவான் என்றழைக்கப்படும் கடவுளா

ஆதி என்ற சொல்லும் இறைநிலையைத்தானே குறிக்கும் ? இங்கே எதற்கு பகவன் என்ற பதம் தேவையின்றி வள்ளுவர் பயன்படுத்தவேண்டும் ? ஒரே பொருளினைக் கொண்ட இரு சொற்கள் வள்ளுவர் ஏன் பயன்படுத்தவேண்டும் ?

ஆதி என்பது இருப்பு நிலை. அதில் பேராற்றல், பேரறிவு, பூரணம் என்ற முத்தரங்கள் உள்ளடங்கியுள்ளன. அள்ள அள்ள குறையாத வற்றா இருப்பு நிலை.  சிவகலம்

பகவன் என்பது பகு + அவன் என்பதாகும்

சிவகலமாக அமைதியாக இருந்த இருப்பு நிலை இப்பொழுது இயக்க நிலைக்கு (சக்தி கலம்) பரிணமிப்பதாகும்

துவைதம் அத்வைதம் விசிஷ்டாத்வைதம் போன்ற சித்தாங்கள் இங்கிருந்தே தோன்றியிருக்க வேண்டும். இருப்பு நிலை இயக்க நிலையாக பரிணமித்தபின்னரே பேரியக்கப் பெருமண்டலங்கள் தோன்றியிருக்கின்றது

உலகு என்ற சொல்லானது பேரியக்கப் பெருமண்டலங்களான இந்த பிரபஞ்சத்தினைக் குறிக்கின்றது

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு 

என்ற குறளின் உட்பொருள் விளக்கம், இருப்பு நிலையாகிய இறைநிலை தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தத்தின் காரணமாக இயக்கநிலைக்கு பரிணமித்து பேரியக்க மண்டலங்களாகப் பரிமாற்றம் அடைந்தன என்பதையே வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

Referenceces:
     -    திருக்குறள் உட்பொருள் விளக்கம்வேதாத்திரி மகரிஷி
     -    Are We Alone …? (About ET Article) By Raveendran Krishnasamy , 1990 DAC Magazine
    -    NOTHING (About  Nothingness based on Quantum Physics,) By Raveendran Krishnasamy 1991 DAC Magazine)